ஹேப்பி பர்த்டே பிரியா ஆனந்த்!!!

17th of September 2014
சென்னை:தமிழில் ‘வாமனன்’ படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். ஆனாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மாறிமாறி நடித்த அவர்மீது, ஸ்ரீதேவியுடன் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் ஒரு வெளிச்சம்போட்டுக் காட்ட, அதன்பின் கடந்த வருடம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
 
தொடர்ந்து சிவாவுடன் ‘வணக்கம் சென்னை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’ அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’, விமலுடன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, கௌதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை’ என இந்த வருடத்திய தமிழ்சினிமாவின் ஆட்ட நாயகி யாரென்றால் அது பிரியா ஆனந்த் தான்..
 
அந்தவகையில் பிரியா ஆன்ந்த்தின் கேரியர் க்ராஃப் சீராகவே உள்ளது. இன்று பிறந்தநாள் காணும் ப்ரியா ஆனந்த்திற்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments