1st of September 2014
சென்னை:மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் தங்களது கிரியேட்டிவ் டைரக்டர் ஆக சௌந்தர்யாவை நியமித்திருக்கிறது.
கோச்சடையான்’ படத்தின்போதே சௌந்தர்யாவின் தொழில்நுட்ப மற்றும் கிரியேட்டிவ் திறமையை பார்த்து வியந்த ஈராஸ் நிறுவனம் இப்போது சரியான தருணத்தில் அவருக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது. ஈராஸ் நிறுவனத்தில் இணைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறும் சௌந்தர்யா, தனக்கு விருப்பமான தொழிலான திரைப்பட இயக்குநர் பணியையும் தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment