20th of September 2014
சென்னை:Tags : Aranmanai Sucess Images, Aranmanai Movie Sucess Images, Aranmanai Sucess Pic, Aranmanai Sucess Gallery, Aranmanai Sucess Photos.
வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, கோவை சரளா, மனோபாலா, சரவணன், சந்தானபாரதி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து அரண்மனை படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. அது மட்டுமல்ல, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். அரண்மனை படம் நேற்று வெளியாகி உள்ளது. காமெடி படங்களை இயக்குவதில் வல்லவரான சுந்தர்.சி.க்கு பேய்ப்படம் இயக்கத் தெரியுமா என்ற கேள்வியுடன் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போனவர்கள் பரம திருப்தியுடன் வெளியே வருகிறார்கள்.
பேய்ப்படத்தில் இவ்வளவு காமெடியை புகுத்த முடியுமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கலகலப்பான காமெடிப்படமாக பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார். அரண்மனை படத்தில் பேயாக நடித்திருப்பவர் ஹன்சிகா. க்ளைமாக்ஸில் ஹன்சிகாவின் ஆவி வானுலகம் சென்றுவிடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடைசி ஷாட்டில் அந்த அரண்மனைக்குள் ஒரு ஆவி இருப்பதுபோல் காட்டி படத்தை முடித்திருக்கிறார் சுந்தர்.சி.
ஆக...அரண்மனை பார்ட் 2 எடுக்கும் திட்டத்திலேயே இப்படி செய்திருக்கிறாரா? சுந்தர்.சியிடம் கேட்டபோது,அரண்மனை படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அப்படி ஒரு ஷாட்டைப்போட்டு பார்ட் 2 எடுப்பதற்கான லீடை வைத்தேன். விஷால் படத்தை முடித்த பிறகு அரண்மனை பார்ட் 2 எடுப்பேன் என்று கூறினார்.
Comments
Post a Comment