சென்னை:அரண்மனை படத்துக்காக 3 கோடியில் பிரமாண்ட அரண்மனை அரங்கு அமைத்தததாக சுந்தர். சி தெரிவித்தார்
சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை
ஹாரர் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில்
வெளியிடப்பட்டது. படத்தின் பாடல்களையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
படம் குறித்து பேசிய சுந்தர்.சி, இந்தப் படத்துக்காக ஹைதராபாத்திலுள்ள
மணிகொண்டாவில் 3 கோடி செலவில் பிரமாண்ட அரண்மணை அரங்கு அமைத்து அதில்
படப்பிடிப்பு நடத்தியதாக கூறினார். சமீபத்தில் எந்தத் தமிழ்ப் படத்துக்கும்
இவ்வளவு பெரிய தொகைக்கு அரங்கு அமைக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. கலை இயக்குனர் குருராஜ் இந்த அரண்மனை அரங்கை அமைத்தார்.
Comments
Post a Comment