Agathinai Movie New Stills!!! தொடர்ந்து நடிக்கவே விரும்புகிறேன் - தயாரிப்பாலர் டி.ஆர்.ஸ்ரீகாந்த்!!!

1st of September 2014
சென்னை:Tags : Agathinai New Movie Photos, Agathinai Latest Movie Gallery, Agathinai Unseen Movie Pictures, Agathinai Film Latest images, Agathinai Movie Hot Stills, Agathinai Movie New Pics.
 
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடன இயக்குநர்கள் என்று சினிமாவின் மற்ற துறையிகளில் இருப்பவர்கள் பலரும், நடிப்பு துறைகு அவ்வபோது வந்து போவதுண்டு. அதில் பலர் தங்களது நடிப்பின் மூலம் தொடர்ந்து நடிகர்களாகவே மாறியதும் உண்டு.

அந்த வகையில், தற்போது நடிகராக அறிமுகமாகியுள்ளவர் தயாரிப்பாளர் டி.ஆர்.ஸ்ரீகாந்த். விரைவில் வெளியாக உள்ள ‘அகத்திணை’ படத்தின் தயாரிப்பாளரான டி.ஆர்.ஸ்ரீகாந்த், அப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பலரும், ஸ்ரீகாந்தின் நடிப்பை பெரிதும் பாராட்டியுள்ளார்களாம்.

சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீகாந்த், தனது சினிமா பயணத்தைப் பற்றி கூறுகையில், “எண்ணுகின்ற எண்ணம் சிறப்பாக இருந்தால் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டாய் மாறும் ! என்று நினைப்பவன் நான்.

அதனால் தான் சின்ன வயதில் ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன் சில காரணங்களால் அந்த படம் தொடரப்படவில்லை.

’காலேஜ் புல்லட்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன் அதுவும் சரிபட்டு வராமல் போகவே எங்கள் கட்டுமான தொழிலை தொடர்ந்து செய்தேன்.

20 வருடம் உழைத்து முன்னேறி எனது லட்சியமான கலைத் துறைக்கு இன்று தயாரிப்பாளனாக ’அகத்திணை’ படத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

யு.பி.மருது சொன்ன கதை பேமிலி ஓரியண்ட் படமாக இருந்ததால் உடனே தயாரிக்க முன்வந்தேன். படம் முடிவடைந்து விட்டது.

படத்தில் எனக்கும் முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்தை தந்து என்னையும் நடிகனாக்கிய இயக்குநருக்கு நன்றி.

ஒரு நடிகனாக தொடர்ந்து சினிமா துறையில் பணியாற்ற விரும்புகிறேன். அந்த வகையில் நல்ல கதாப்பாத்திரம் எது வந்தாலும் நடிக்கத் தயார்.” என்றார்.













Comments