27th of September 2014
சென்னை:நாகேஷ் என்கிற மகா கலைஞனை தவிர்த்துவிட்டு தமிழ்சினிமாவின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் காட்டி, இன்றைய இளைய தலைமுறையினர் கூட தொலைக்காட்சிகளில் அவர் நடித்த படங்களை பார்த்து வாய்விட்டு சிரிப்பது அந்த மகா கலைஞன் நமக்கு தந்த கொடை.

வெறுமனே நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாது கதையின் நாயகனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக, வில்லனாக என தன்னால் எந்த எல்லைக்கும் தனது நடிப்பை விஸ்தரித்துக்கொள்ள முடியும் என இலக்கணம் உரைத்த உண்மையான ‘நடிகன்’..
இந்தியாவின் சார்லி சாப்ளின் என ரசிகர்களால் என்றென்றும் அன்புடன் அழைக்கபடும் பாக்கியம் பெற்ற, அதற்கு உண்மையிலேயே மிகவும் தகுதியான நடிகர்தான் நாகேஷ்.. அவர் மறைந்தாலும், இன்றும் அவரது படங்கள் மூலமாக நம்முடன் வாழ்கிறார் என்பதே உண்மை. அந்த நகைச்சுவை நாயகனின் 81வது பிறந்ததினமான இன்று அவரை நினைவுகூர்வது ஒவ்வொரு ரசிகனின் கடமையும் கூட..!
Comments
Post a Comment