மூன்றே நிமிடம் ஓடும் பாடலுக்காக ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கிய ஸ்ருதி!!!

27th of September 2014
சென்னை:மூன்றே நிமிடம் ஓடும் பாடலுக்காக ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.தெலுங்கில் மகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஆகடு. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் ஆடியிருந்தார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம், ரூ.40 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வெறும் 3 நிமிடங்கள் மட்டும் இந்த பாடல் வரும்.

இந்த பாடல் காட்சியை ஒரே நாளில் படமாக்கி விட்டார்கள். ஒரு நாள் கால்ஷீட்டுக்காக அவருக்கு ரூ.40 லட்சம் தரப்பட்டுள்ளது. இது மற்ற நடிகைகளுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறுகையில், ஒரு படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் தலா ரூ.1 கோடியே 25 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
 
அதே நடிகை, ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் வாங்குவது சாதாரணமாகிவிட்டது. அல்லுடு சீனு என்ற படத்துக்காக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட தமன்னாவும் இதே சம்பளத்தைதான் வாங்கினார் என்றன.

Comments