23rd of September 2014
சென்னை:சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் ‘சங்கராபராணம்’. கே.விஸ்வநாத் இயக்கி, கே.வி.மகாதேவன் இசையமைத்த தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாகி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர்.
இதுபற்றி எஸ்.பி.பி சொல்லும்போது, “இந்தப்படம் தெலுங்கில் உருவானபோது நான் பல படங்களில் பிசியாக பாடிக்கொண்டிருந்த நேரம்..
அப்போது என் வீட்டிற்கு வந்த இசைமேதை கே.வி.மகாதேவன் அண்ணா என் தந்தையிடம் ஒழுங்கா அவனை இந்தப்படத்துல பாடிக்கொடுத்துட்டு மற்ற படத்துல பாடச்சொல்லுங்க என அன்பாக மிரட்டினார். என் தந்தையும் அவனுக்கு நல்லா பாடவரலைன்னா அவன் கன்னத்துல அறைந்து பாடவைங்க என்றார். அதன்பின் இந்தப்பாடலுக்காக மிகவும் பயிற்சி எடுத்து பாடினேன். அதுதான் எனக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது” என்கிறார் பெருமிதத்துடன்.
Comments
Post a Comment