1st of September 2014
சென்னை:இந்த வருடம், அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் இரண்டுமே திரையுலகில் நடிகை ராய்லட்சுமி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மாதங்களாக ஆகிவிட்டன. பின்னே 22 நாட்களுக்குள் தான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாவது என்பது ஒரு நடிகையாக ராய் லட்சுமிக்கு சாதனை தானே..
கடந்த ஆகஸ்ட்-29ல் தான் அவர் நடித்த ‘இரும்பு குதிரை’ வெளியானது. அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள ‘ராஜாதி ராஜா’ வரும் செப்டம்பர்-5ல் ஓணம் ஸ்பெஷலாக ரிலீசாக இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் சுந்தர்.சி டைரக்ஷனில் அவர் நடித்துள்ள ‘அரண்மனை’வெளியாகிறது. ஆக, ராய்லட்சுமி காட்டில் இப்போ அடைமழை தான்.
Comments
Post a Comment