க்ளைமாக்ஸுக்கு 20.. கிராபிக்ஸுக்கு 60.. கேட்கிறது லாரன்ஸின் ‘முனி-3’!!!

2nd of September 2014
சென்னை:காஞ்சனா’ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘முனி- 3 கங்கா’படத்தின்  பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்க, இவர்களுடன் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி வரும் 4ஆம் தேதி முதல் படமாக்கப்பட உள்ளது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளது என்றால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கோ இரண்டு மாதம் தேவைப்படுகிறது. “இடையில் சில மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் தான் இந்த காலதாமதம். ஆனால் எப்படியும் படம் டிசம்பர் மாதம் வெளியாகிவிடும்” என்கிறார் லாரன்ஸ்.

Comments