12th of September 2014
சென்னை:காந்தி ஜெயந்தி தினமான அக்-2ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்காக படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுவரை சொல்லப்பட்டிருக்கும் பட்டியலில் ஜீவா, துளசி நடித்துள்ள ‘யான்’, விமல், பிரியா ஆனந்த் நடித்துள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்கள் உறுதியாக ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிகிறது.
இது தவிர சிறிய பட்ஜெட் படமான ‘மொசக்குட்டி’யும் அன்றுதான் ரிலீசாக இருக்கிறது. ஸ்ரீகாந்த், சுனைனா நடித்துள்ள ‘நம்பியார்’ மற்றும் சந்தானம், சேது நடித்துள்ள ‘வாலிபராஜா’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ ஆகிய படங்களும் காந்தி ஜெயந்தியைத்தான் குறி வைத்திருக்கின்றன.
தவிர ஹ்ரித்திக் ரோஷனோட ‘பேங் பேங்’ படமும் தமிழ் வெர்ஷனில் வெளியாகுது. இதில் ஏதாவது ஒன்றிரண்டு படம் வேண்டுமானால் போட்டியில் இருந்து விலகலாமே தவிர மற்றபடி இத்தனை படங்கள் வெளியானால் ற்றாபிக்கால் கோலிவுட் தியேட்டர்கள் திணறப்போவது உறுதி..
Comments
Post a Comment