28th of September 2014
சென்னை:தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள்.
அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். கன்னட ஹீரோ சுதீப் வில்லன்.
ஸ்ரீதேவி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் உதவியாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.
இது சரித்திர கால கதையும், நிகழ்கால கதையும் இணைந்த திரைக்கதை. அதாவது தெலுங்கில் வெளிவந்த மகதீரா பாணியிலான கதை. இதற்கான படப்பிடிப்புகள் 5 கட்டமாக நடக்க இருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் கேரளாவில் தொடங்குகிறது.
இரண்டாவது கட்டம் மைசூரிலும், மூன்றாவது கட்டம் தமிழ்நாட்டிலும், நான்காவது கட்டம் வடநாட்டிலும், 5வது கட்டம் வெளிநாட்டிலும் நடக்கிறது.
இந்தப் படத்திற்காக விஜய் 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். கிராபிக்ஸ் பணிகளை ஹாலிவுட் நிறுவனம் கவனிக்கிறது.
9 மாதங்கள் படப்பிடிப்பு, 3 மாதம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என ஒரு வருட தயாரிப்பாக சுமார் ரூ.100 கோடியில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment