22nd of August 2014
சென்னை:அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வரும் ஆகஸ்ட்-29ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளார்கள். சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். முக்கியமான கேரக்டர்களில் ராய் லட்சுமியும் பைக் வீராங்கனை அலிஷாவும் நடித்திருக்கிறார்கள்.. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பைக் சாகசம் செய்யும் இளைஞர்களைப் பற்றி ஒரு முழுநீள ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.
Comments
Post a Comment