Thiruttu Kalyanam Movie Stills!!! ஒரு காட்சியில் நடித்தவர்கள் ஹீரோ-ஹீரோயின் ஆன கதை தெரியுமா..?!!!

2nd of August 2014
சென்னை:Tags : Thiruttu Kalyanam New Movie Photos, Thiruttu Kalyanam Latest Movie Gallery, Thiruttu Kalyanam Unseen Movie Pictures, Thiruttu Kalyanam Film Latest images, Thiruttu Kalyanam Movie Hot Stills, Thiruttu Kalyanam Movie New Pics.
 
விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் ஒரெ ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டியவர்கள் தான் விதார்த்தும் விமலும். ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜஸ்ட் லைக் தட் வந்து போனவர் தான் விஜய்சேதுபதி. அவ்வளவு ஏன் நம்ம த்ரிஷாவே ‘ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழியாக ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் நடித்தவர் தானே..
 
இன்றைக்கு இவர்களெல்லாம் டாப் ஹீரோ-ஹீரோயினாகி விட்டனர். அதனால் வாய்ப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்த ரங்காயாழி என்பவரையும் மூடர்கூடம் படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்துபோன தேஜஸ்வீ என்பவரையும் ‘திருட்டுக்கல்யாணம்’ என்ற படத்தில் ஹீரோ-ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடிவந்திருப்பதும் இப்படித்தான். இந்தப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஷக்திவேலன். இவர் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளராக வேலைபார்த்த கார்த்திக் நல்லமுத்து தான் கேமராமேன். திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறமா?
 
திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல.. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும் தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 


 

 

 



 


 

 

 

 

 

Comments