Sigaram Thodu Audio and Trailer Launch Stills!!! சிகரம்தொடு இசை வெளியீடு - படங்கள்!!!

8th of August 2014
சென்னை:Sigaram Thodu Audio and Trailer Launch Held at Sathyam Cinemas. The Audio CD Released By Kamal Haasan and Received By K S Ravi Kumar, Sigaram Thodu Movie Trailer Released By Dhanush and Received By K J Yesudas. Producer Council President K R, Sivakarthikeyan, Vijaysethupathy and Many Kollywood Celebrities Graced The Event.,
 
Tags : Sigaram Thodu Audio Release Gallery, Sigaram Thodu Songs Launch Event Stills, Sigaram Thodu Movie Audio Release Photos, Sigaram Thodu Audio CD Launch Pictures, Sigaram Thodu Audio Release Function images.

விக்ரம் பிரபு முதல் முறையாக போலீஸ் வேடமிட்டு நடித்திருக்கும் ‘சிகரம் தொடு’ படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் ‘தூங்கா நகரம்’ கௌரவ். இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று  காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.

இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரபு, படத்தின் நாயகன் விக்ரம் பிரபு, நாயகி மோனல் கஜார், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், பாடகர் ஜேசுதாஸ் உட்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட அதனைப் பெற்றுக் கொண்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.

அதேபோல் ‘சிகரம் தொடு’ படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட அதனை பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக் கொண்டார். இப்படத்தில் அப்பா சம்பந்தமான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறாராம் ஜேசுதாஸ். அப்பா, மகன் சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையம்சத்துடன் கூடிய குடும்பச் சித்திரமாம் இந்த ‘சிகரம் தொடு.

























 






Comments