Mystic Collisions New Music Troupe Function Photos!!! இசையுலகில் புதுமை பரப்ப வரும் ‘மிஸ்டிக் கொலிஷன்ஸ்’!!!

3rd of August 2014
சென்னை:Tags : Mystic Collisions New Music Troupe Function Gallery, Mystic Collisions New Music Troupe Event Photos, Mystic Collisions New Music Troupe Pictures, Mystic Collisions Music Troupe Function Stills,  Mystic Collisions New Music Troupe Function images.

ஏர்டெல் சூப்பர் சிங்கர்  2011 டைட்டில் வின்னர் சாய்சரண் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் முன்னணி முகங்களான கௌஷிக், நாராயணன் ஆகிய இந்த மூவரும் இணைந்து உருவாக்கியுள்ள இசைக்குழுதான் ‘மிஸ்டிக் கொலிஷன்ஸ்’. இவர்களது இந்த இசை முயற்சியை பாராட்டி ஊக்க மூட்டிய இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை தங்களால் மறக்க முடியாது என்று மூவரும் ஒரே ஸ்ருதியில் கூறுகிறார்கள்.
 
பிரபலமான மெட்டு..  ஆனால் புது அனுபவம். புதிய சோதனை முயற்சி.. பாட்டு மெட்டு மாறாது. அதில் உள்ள பிஜிஎம் எடுத்துவிட்டு எங்கள் பிஜிஎம் போட்டு சுவை கூட்டுவோம்.. நாம் கேட்டு ரசித்த பாடல்களை மேற்கத்திய புதுப்புது இசைப் பின்புலம் என அலங்காரப்படுத்தி தருகிறோம். இது நிச்சயம் ரசிக்க வைக்கும். “என்கிறார் சாய்சரண்.
 
லோக்கலாக சென்னையில் வேரூன்றி குளோபலாக உலகெங்கும் கிளைபரப்பி இசை பரப்பவுள்ளது. இவர்களுடன் ஏர்டெல் போட்டி பாடகிகள் மதுமிதாவும் வைஷாலியும்  இணைந்துள்ளனர்.  ஓர் இசை நிகழ்ச்சியுடன் ஆகஸ்ட் -1ல் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது இந்த ‘மிஸ்டிக் கொலிஷன்ஸ்’ குழு. புதிய இசைக்குழு மிஸ்டிக் கொலிஷன்ஸ் பாண்ட் தொடக்கவிழா நேற்று சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
 
சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ‘இசைமழலைகள்’ நிறுவனர் அபஸ்வரம் ராம்ஜி, பிரபல பாடகர் அனந்த் வைத்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களிடம் இசைக்குழுவினர் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட பின் கச்சேரி தொடங்கியது
நிகழ்ச்சி வந்தவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஆக, புதுவித இசைப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறது  மிஸ்டிக்கொலிஷன்ஸ்’

 

 

 

 


 







 

Comments