Megha Press Meet Stills!!! குப்பை படங்களையும் நான்குமுறை பார்க்கவேண்டிய தலையெழுத்து எனக்கு” – இசைஞானியின் ஓபன் டாக்!!!

13th of August 2014
சென்னை:Tags : Megha Media Meet Stills, Megha Press Meet Gallery Pics, Megha Press Meet images, Megha Team Meet Media Peoples Pictures, Megha Press Meet Event Photos.

நேற்று ‘மேகா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப்படத்தை கார்த்திக் ரிஷி என்பவர் இயக்கியுள்ளர். படத்தை தயாரித்துள்ள ஆல்பர்ட் ஜேம்ஸ் இசைஞானியின் தீவிர ரசிகர். இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா, “நல்ல படங்களோ அல்லது மோசமான படங்களோ இரண்டிற்கும் எனது இசை நேர்மையானதாக மட்டுமே இருக்கும். மோசமான படம் என்பதற்காக, நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு இசையை அள்ளித்தருகிற சரஸ்வதிக்கு என்னால் எப்படி துரோகம் செய்ய முடியும்..?
 
எவ்வளவோ மோசமான படங்களுக்குலாம் நான் மியூசிக் பண்ணியிருக்கிறேன். நீங்க ஒரு தடவைப் பார்த்து 'தூ..'ன்னு துப்புன படங்களையெல்லாம் நான் நாலு தடவைப் பார்த்து மியூசிக் பண்ணியிருக்கிறேன். முதல்ல படத்தோட ரீலைப் போட்டுப் பார்ப்போம். அப்புறம் அதே ரீலைப் பார்த்து மியூசிக் கம்போஸ் பண்ணணும். ஆர்க்கெஸ்ட்ராவோட மியூசிக் கம்போஸ் பண்ணி, ரிகர்சல் பண்ணி, கண்டக்டர் கிட்ட சொல்லி பார்க்கணும். அப்புறம் டேக், அதுல ஏதாவது தப்பு ஆச்சின்னா திரும்ப ஒரு டேக்...இப்படி டேக் மேல டேக் போனால் அந்தப் படத்தை நான் எத்தனை முறை பார்க்கணும். நீங்க ஒரு தடவைப் பார்த்து திட்டற படத்தை நான் எத்தனை முறை பார்க்கணும். அப்ப நான் எவ்வளவு பெரிய பொறுமைசாலி..” என்றார்.

அப்படித்தான் பாரதிராஜாவோட 'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்த்ததும் எனக்குப் பிடிக்கலை. அதை அவர்கிட்டயே நேரடியா சொல்லிட்டேன். படத்துல கிளைமாக்ஸ் காட்சி..அதுக்கு இசையமைச்சிட்டு பாராதிராஜாவைக் கூப்பிட்டுக் காட்டினேன். அவரு அப்படியே கையை பிடிச்சிக்கிட்டு கண்ணீரோட “உனக்குப் பிடிக்காமலயே இவ்வளவு அருமையா இசையமைச்சிருக்கியேன்னு” உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. இந்த விஷயத்தை யாரும் இதுவரைக்கும் வெளிய சொல்லலை. இன்டஸ்ட்ரில இருக்கிறவங்களுக்குத் தெரியும்.
 
இசைங்கறது எனக்கு சரஸ்வதி மாதிரி. எனக்குப் படம் பிடிக்கலையா, பிடிக்கலை. ஆனால் என் தொழிலுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். இந்த 'மேகா' படத்துல இயக்குனர் கார்த்திக் ரிஷி அருமையா திரைக்கதை அமைச்சி படத்தை அருமையா எடுத்திருக்காரு. முதல் படத்தையே இவ்வளவு அருமையா பண்ணிட்டியே, அப்புறம் என்னய்யா பண்ணப் போறேன்னு கேட்டேன். அதுதான் இந்தப் படத்திற்கு ஆசீர்வாதம்,.என ஜாலியாக பேசினார் இளையராஜா.
















Comments