3rd of August 2014
சென்னை:Tags : Mahabalipuram Movie New Posters, Mahabalipuram Film Banner images, Mahabalipuram Latest Poster, Mahabalipuram Movie Wallpaper Pictures, Mahabalipuram New Movie Stills, Mahabalipuram Gallery.
கிளாப் போர்ட் மூவீஸ் என்ற புதிய நிறுவனத்தின் உரிமையாளர் வினாயக்
தயாரித்துள்ள மகாபலிபுரம் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு
தயாராகிவிட்டது. படத்தை எடுத்த நிறுவனத்தால் அதனை வெளியிட இயலவில்லை.
அதனால் படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டு விட்டனர்.
ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.
படத்தின் ஹீரோ தயாரிப்பாளர் வினாயக்தான். அவருடன் அங்கனா ராய், கருணா,
ரமேஷ், வெற்றி, கார்த்திக் நடித்துள்ளனர். சேண்டி என்பவர் இயக்கி உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்துதான் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தை மினி உலகம் என்று சொல்லலாம் எல்லா நாட்டு மக்களின் கால் தடமும் தினமும் அங்கு பதிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கும் மகாபலிபுரத்தை சுற்றியுள்ள
கிராமங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சுற்றுமுற்று கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் மகாபலிபுரம் வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள். அது சர்வதேச அளவிலான பெரிய பிரச்னை, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது படத்தின் கதை.
Comments
Post a Comment