Kadhai Thiraikadhai Vasanam Iyakkam Press Show Stills!!! ரசிகர்களோடு ரசிகராய் படத்தை பார்த்த பார்த்திபன்!!!
17th of August 2014
சென்னை:Tags : Kadhai Thiraikadhai Vasanam Iyakkam Press Show Stills, Kadhai Thiraikadhai Vasanam Iyakkam Press Show Images, Kadhai Thiraikadhai Vasanam Iyakkam Press Show Gallery, Kadhai Thiraikadhai Vasanam Iyakkam Press Show Pic.
ஆகஸ்ட் 15-ந்தேதி சூர்யா நடித்துள்ள அஞ்சான் வருகிறது என்றதும் பல படங்கள்
பின்வாங்கி விட்டன. சரியான தியேட்டர் கிடைக்காது என்பதோடு, முன்னணி
ஹீரோவுடன் மோதி மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாமே என்பதும் இதற்கு காரணம்.
ஆனால், பார்த்திபன் தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை
ஆகஸ்ட் 29ல் ரிலீஸ் செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தவர். பின்னர், அந்த
முடிவை மாற்றி முன்னதாக, 15-ந்தேதியே தனது படத்தை இறக்கி விட முடிவு செய்து
தற்போது களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.
இந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படும்போது சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று அதன் வாசலிலேயே நின்று ரசிகர்களோடு ரசிகராய் தானும் படத்தை பார்த்திருக்கிறார் பார்த்திபன். அப்போது முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி படத்தை ரசித்துள்ளனர். அதைப்பார்த்து அதே இடத்தில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் பார்த்திபன்.
இந்த ஆனந்த கண்ணீரோடு அதேநாளில் பத்திரிகையாளர்களுக்கு அப்படம் திரையிடப்பட்ட பிரசாத் லேப் தியேட்டருக்கும் வந்த பார்த்திபன், படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கிற ஆதரவை பார்த்து அழுது விட்டுத்தான் உங்கள் முன்பு வந்திருக்கிறேன் என்று சிறிது நேரம் பேசினார். ஆனபோதும், தொடர்ந்து பேச முடியாமல் கண்கலங்கிய நிலையில், பத்திரிகையாளர்களிடமிருந்தும் விடைபெற்று சென்றார் பார்த்திபன்.
அதையடுத்து, பத்திரிகையாளர்கள் அனைவரும் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பார்த்திபன் மட்டும் வாசலில் சாய்ந்து நின்றபடி படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே ரசிகர் தொனியில் அவரும் காமெடி காட்சிகளில் கைதட்டி தானும் படத்தை கண்டுகளித்தார்.
Comments
Post a Comment