Irumbu Kuthirai Press Meet Stills பைக் ரேஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ்’இரும்புக்குதிரை!!!

7th of August 2014
சென்னை:பைக் ரேஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ்’, ‘தூம்’ போன்ற படங்கள் இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் தந்துள்ளது. இந்திய சினிமாவில் பைக் ரேஸ் வைத்து அதிக படங்கள் வந்ததில்லை என்று சொல்லலாம். அந்த குறையை அதர்வாவின்  இரும்புக்குதிரை’ போக்கும் என்கிறார்கள். இப்படம் குறித்து அதர்வா கூறும்போது,
 
இரும்புக்குதிரை’ தமிழ் சினிமாவில் ம் மாறுபட்ட ஒரு பாமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான ஒரு அனுபவத்தை தருவதோடு, பார்ப்பவர்களை வியக்கவும் வைக்கும் படமாக அமைந்துள்ளது’’ என்கிறார். அறிமுக இயக்குனர் யுவராஜ் போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.
 
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீ.வி.பிரகாஷ்குமார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த ஜீ.வி., தற்போது தயாரிப்பாளர், ஹீரோ என்று வளர்ந்து கொண்டே செல்கிறார். தற்போது இவர் அதர்வா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இரும்புக்குதிரை படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு தனியார் எப்.எம். ஒன்றில் இன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதர்வா, ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி ஜீ.வி.பிரகாஷ், இயக்குநர் யுவராஜ்போஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீ.வி.பிரகாஷ்குமார், ''இரும்புக்குதிரை'' படத்தில், கவிஞர் தாமரை எழுதிய ''பெண்ணே பெண்ணே அன்றிலாகி கரைகிறேன்...'' என்று தொடங்கும் பாடலை பவதாரணியுடன் இணைந்து பாடியுள்ளேன். முதன்முறையாக பவதாரணியுடன் பாடியது புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இரும்புக்குதிரை படம் பைக்ரேஸை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் என்பதால் புதிய இசை கருவிகள் மூலம் பல புதுமையான இசைகளை இப்படத்தில் புகுத்தியுள்ளேன், ரசிகர்கள் இது ஒரு புதிய அனுபவத்தை தரும் என்றார்.





 








Tags : Irumbu Kuthirai Media Meet Stills, Irumbu Kuthirai Press Meet Gallery Pics, Irumbu Kuthirai Press Meet images, Irumbu Kuthirai Team Meet Media Peoples Pictures, Irumbu Kuthirai Press Meet Event Photos.

Comments