10th of August 2014
சென்னை:Tags : Adharva in Irumbu Kuthirai New Movie Photos, Irumbu Kuthirai Latest Movie Gallery, Irumbu Kuthirai Unseen Movie Pictures, Priya Mani with Adharwa in Irumbu Kuthirai Film Latest images, Irumbu Kuthirai Movie Hot Stills, Irumbu Kuthirai Movie New Pics.
இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள அதர்வா. அஜீத்
ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக
பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஒரு படத்தில் பைக் ரேசராக
நடித்திருக்கிறேன். இது சந்தோசம்தான் என்றாலும், அந்த விளையாட்டு எவ்வளவு
ஆபத்தானது என்பதையும் அறிந்து கொண்டேன் என்கிறார்.
மேலும் இந்த படத்தில் கெத்தான வில்லனாக நடித்துள்ள ஜானியுடன், பைக்கில் பயணித்தபடி ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளாராம் அதர்வா. அந்த காட்சியில் கதைப்படி அதர்வாவின் காதலியான ப்ரியாஆனந்தும் பைக்கிற்கு பின்னால் உட்கார்ந்திருப்பாராம். அப்போது பைக்கை வேகமாக ஓட்டியபடி அதர்வா நடித்தபோது அவரை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ப்ரியாஆனந்த் பயத்தில் அவ்வப்போது அலறிக் கொண்டேயிருந்தாராம்.
ஒருகட்டத்தில் அவரது அலறல் அதிகமாகி விட்டது என்றாலும், கதைப்படி அவர் அதர்வாவுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவரையும் வைத்து படமாக்கினார்களாம். அப்போது ஒருமுறை, பைக் ஒரு மரத்தில் மோதி அதர்வாவும், ப்ரியாஆனந்தும் கீழே விழும் காட்சியில் நிஜமாலுமே கீழே விழுந்து உருண்டு விட்டாராம் ப்ரியாஆனந்த். அவரது கையில்கூட சின்னச்சின்ன சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதாம்.
அதையடுத்து, அவருக்கு உடனடியாக மருந்திட்டு ஓய்வு கொடுத்தார்களாம். அப்போது, சண்டைகாட்சி ஹீரோவுக்கும், வில்லனுக்கும் தானே என்னையும் எதுக்கு கூடவே அனுப்புறீங்க என்று டைரக்டரிடம் வாக்குவதம் செய்தாராம் ப்ரியா. அதன்காரணமாக, பாதி பைட் சீனுக்கு பிறகு அவரை அதர்வா கீழே இறக்கி விடுவது போன்று ஒரு ஷாட் எடுத்து விட்டு, ப்ரியாஆனந்துக்கு பைட் சீனில் இருந்து அவுட் கொடுத்தார்களாம்.
Comments
Post a Comment