17th of August 2014
சென்னை::Tags : Director R C Sakthi Birthday Celebration 2014 With Friends Photos, Director R C Sakthi Birthday Party Gallery, Kamal Haasan at Director R C Sakthi Birthday Event images, Director R C Sakthi Birthday Celebration With Kamal Haasan and Movie Celebrities Pictures, Director R C Sakthi Birthday Function Stills.
Tags : Director R C Sakthi Birthday Celebration 2014 With Friends Photos, Director R C Sakthi Birthday Party Gallery, Kamal Haasan at Director R C Sakthi Birthday Event images, Director R C Sakthi Birthday Celebration With Kamal Haasan and Movie Celebrities Pictures, Director R C Sakthi Birthday Function Stills.
உணர்ச்சிகள் படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர்
ஆர்.சி.சக்தி. பரமக்குடியை சேர்ந்த இவர் கமலஹாசனின் இளமைக்கால நண்பர்.
மனிதரில் இத்தனை நிறங்களா?. தர்மயுத்தம், ஸ்பரிசம், சிறை, உண்மைகள்,
கூட்டுப்புழுக்கள், பத்தினி பெண் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களை
இயக்கியவர்.
ஆர்.சி.சக்தியின் பவள விழா (75வது பிறந்த நாள்) சென்னையில்
உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் ஆர்.சி.சக்தியின் நீண்ட நாள்
நண்பர் கமலஹாசன் கவுதமியுடன் கலந்து கொண்டு ஆர்.சி.சக்திக்கு மோதிரம்
அணிவித்து வாழ்த்தினார். பின்னர் கமல் பேசியதாவது:
எனக்கும்
சக்திக்கும் 15 வயது வித்தியாசம். ஆனாலும் அவரும் நானும் நண்பர்களாக
இருக்கிறோம். நான் படம் எடுத்தால் உன்னை ஹீரோவாக வைத்துதான் எடுப்பேன்
என்று சொல்லி அதை உணர்ச்சிகள் படத்தில் செய்தும் காட்டியவர். இயக்குனர்
அல்லது டான்ஸ் மாஸ்டராக வேண்டும் என்று நினைத்த என்னை நடிகனாகு என்று
சொன்னவர் அவர். நீ நன்றாக எழுதுகிறாய் என்று ஊக்கப்படுத்தியவர். இன்றைக்கு
நான் ஏதாவது எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் சக்தி. எங்கள் நட்பு
காலங்களை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இனியும் தொடரும் என்றார்.
விழாவில்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்,
பொருளாளர் வி.சேகர், இயக்குனர்கள் டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி,
நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், எஸ்.வி.சேகர், சாருஹாசன், கதாசிரியர்
கலைஞானம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Comments
Post a Comment