29th of August 2014
சென்னை:Tags : Burma Media Meet Stills, Burma Press Meet Gallery Pics, Burma Press Meet images, Burma Team Meet Media Peoples Pictures, Burma Press Meet Event Photos
ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் பர்மா.மைக்கேல், ரேஷ்மி மேனன், சம்பத், கனி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை தரணீதரன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இன்ஸ்டிடியூட் மாணவர் சுதர்சன் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 12-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 4 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது பர்மா படம் பற்றி இயக்குனர்
தரணீதரன் பேசுகையில், இப்படம் கார் சேஸிங்கை மையமாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் கொடுத்து பைனான்சில் கார் வாங்கும் சிலர்
பின்னர் மாதந்தோறும் கட்ட வேண்டிய பைனான்சை கட்ட மறந்து விடுகிறார்கள்.
அல்லது சூழ்நிலை காரணமாக கட்ட முடியாமல் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை விரட்டி பிடித்து அந்த காரை சேஸ் பண்ணுவதுதான் இந்த
படத்தின் கதை. அப்படியொரு கார் சேஸிங் வேடத்தில் நாயகன் மைக்கேல்
நடிக்கிறார். இவர் நளனும் நந்தினியும் படத்தில் நாயகனாக நடித்தவர்.
மேலும்,
இந்த படத்துக்காக அவரை அழைத்தபோது ஷேவ் பண்ணி டிப்டாப்பாக வந்து நின்றார்.
அப்போது அவரிடம், இந்த படத்தில் பர்மா என்ற கேரக்டரில் நடிக்கிறீர்கள்.
அந்த பர்மாவுக்கு தாடி, மீசையெல்லாம் இருக்கும். அதனால் ஒரு 3 மாதம்
நீங்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று சொன்னேன்.
அதையடுத்து
ஷேவ் பண்ணுவதை நிறுத்தி விட்டு 3 மாதங்களாக தாடி, மீசையை வளர்த்து விட்டு
வந்து நடித்தார் மைக்கேல் என்று கூறிய தரணீதரன், டியூவ் கட்டாதவர்களிடம்
எப்படி பணம் வசூலிப்பது என்பதில் சிறந்தவராக கருதப்படும்
வடசென்னையைச்சேர்ந்த பர்மா என்பவரிடம் அனுமதி பெற்றே இந்த படத்திற்கும்,
நாயகன் மைக்கேல் கேரக்டருக்கும் பர்மா என்று டைட்டில் வைத்தோம். இது தமிழ்
சினிமாவுக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.
Comments
Post a Comment