26th of August 2014
சென்னை:அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உருவாகும் படம் ‘நண்பர்கள் நற்பணிமன்றம்’. இதில் நாயகனாக ஜெய்நாத் நடிக்க, நாயகியாக அக்ஷயா நடிக்கிறார். இவர்களுடன் கே.பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான் அண்ணாச்சி, ராதா, சிங்கம் புலி, ரவிமரியா, மகேந்திரன், சார்மிளா, கூல் சுரேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், பாரதி கண்னன், நெல்லை சிவா, பாவா லட்சுமணன், முத்துக்களை ஆகியோர் நடிக்கிறார்கள்.
செல்வா ஆர்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைப்பதுடன், ஒரு பாடலில் ஸ்ரீகாந்த் தேவ குத்தாட்டமும் போட்டிருக்கிறாராம். இது குறித்து கூறிய இயக்குநர் ராதாபாரதி, “காமெடி கலந்த காதல் கதை தான் நண்பர்கள் நற்பணி மன்றம். இப்படத்திற்காக சமீபத்தில் திருக்கோடியூர் என்ற கிராமத்தில் கோயில் திருவிழா பாடல் காட்சி எடுக்கப்பட்டது.
”கட்டழகி - சின்ன பொட்டழகி - உன்ன பார்த்தாலே – பலம் கூடும்டி... “ என்ற பாடல் காட்சிக்காக மும்பையிலிருந்து வைபவி என்ற நடிகையை ஒப்பந்தம் செய்தோம். எனக்கு ஈடுகொடுத்து ஆடக் கூடிய நடிகருடன் தான் நடிப்பேன் என்று சொன்னார் வைபவி. படப்பிடிப்புக்கு வந்த அவர் ஜெய்நாத்துடன் ஆடி முடித்த பிறகு நானே எதிர்பார்க்க வில்லை சூப்பராக ஆடி இருக்கே என்று பாராட்டினார்.
அத்துடன் இந்த பாடல் காட்சி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா தலைமையில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தேவாவும் இந்த குத்துப்பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார்.” என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment