ரம்யா நம்பீசனுக்கு தற்போது நடிப்பதைப்போலவே பின்னணி பாடும் வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது!!!

1st of August 2014
சென்னை:தமிழில் பாண்டியநாடு படத்தில் பை பை பை கலாச்சி பை மற்றும் டுமீல் படத்தில் போகாதே என சில பாடல்களை பாடியிருக்கும் ரம்யா நம்பீசனுக்கு தற்போது நடிப்பதைப்போலவே பின்னணி பாடும் வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. தமிழில் பாடுவதற்கு முன்பே, மலையாளம், தெலுங்கில் கிட்டத்தட்ட 15 படங்களில் பாடியுள்ள ரம்யா நம்பீசன், சில படங்களில் தனது குரலை மாற்றியும் வித்தியாசமாக பாடி அசத்தியிருக்கிறாராம்.

அதை ஒரு மலையாளப் படத்தில் கேட்ட இசையமைப்பாளர் தாஜ்நூர், தற்போது தான் இசையமைக்கும் கதம் கதம் என்ற படத்தில் ரம்யாவை ஒரு பாடலை குழந்தை குரலில் பாட வைத்திருக்கிறார். அதாவது பாட்டி வடை சுட்ட கதையை மையமாகக்கொண்டு அப்பாடல் எழுதப்பட்டுள்ளதாம்.


ஒரு பாட்டி வடய சுட்டா, அதை காக்கா தூக்கிப்போச்சு -என்று தொடங்கும் இந்த பாடலில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் கலந்து எழுதப்பட்டுள்ளதாம். இந்த பாடலை ரம்யா பாடும்போது அதை வீடியோவிலும் பதிவு செய்துள்ளார்களாம். காரணம் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் பாடும் பாடல்களை யு டியுப்பில் வெளியிட்டால் அதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்கிறார்கள் . அந்த பாடலும் ஹிட்டாகி விடுகிறது என்பதால், ரம்யா பாடுவதை பல கோணங்களில் வீடியோவில் பதிவு செய்திருப்பவர்கள், விரைவில் அதை யு டியுப்பில் வெளியிடப்போகிறார்களாம்.

Comments