தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இடம் பெறும் அஞ்சான் ஒரு கச்சேரிக் காட்சி சி நீக்கம்!!!

18th of August 2014
சென்னை:அஞ்சான்' படத்தைப் பற்றிய விமர்சனங்களும், கருத்துக்களும் பல்வேறாக இருக்க படம் நன்றாக வசூல் செய்கிறது என்று தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால் பலரும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்துள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வார நாள் ஆரம்பமாகியுள்ள இன்று முதல்தான் தெரிய வரும். விடுமுறை நாட்களில் இருந்ததைப் போல் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து வசூல் இருந்தால் படம் எதிர்பார்த்த வசூலைக் குவிக்கும். அதே சமயம், விமர்சனங்கள், கருத்துக்கள் எதிரொலிப்பால் ரசிகர்கள் படத்தைப் பற்றி ஒரு முடிவெடுத்திருந்தால் இன்று முதல் வசூல் குறையவும் வாய்ப்புண்டு என்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
இதனிடையே படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடமாக இருந்ததை சுமார் 10 நிமிடங்கள் வரை குறைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இடம் பெறும் ஒரு கச்சேரிக் காட்சியை அப்படியே வெட்டி எறிந்திருக்கிறார்கள். அந்த காட்சி என்னவென்றால், சமந்தாவின் ஆசைப்படி அவரை பிரம்மானந்தத்தின் கச்சேரிக்கு சூர்யாவும், அவருடைய நண்பர் வித்யுத் ஜமாவலும் அழைத்துச் செல்கிறார்கள்.
 
ஆனால், அதற்குள் கச்சேரி முடிந்து விட, பிரம்மானந்தத்தை சமாதனப்படுத்தி திரும்பவும் பாட வைக்கிறார்கள். அவர் பாடிய விதத்தைக் கேட்டு, மூவருமே தெறித்து வெளியே ஓடி வருகிறார்கள். இந்தக் காட்சிதான் தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. படம் வெளியான இரண்டு நாட்கள் இந்தக் காட்சி இடம் பெற்றிருந்தது. அவர்கள் நகைச்சுவை என்று நினைத்து வைத்த காட்சியில் தியேட்டரில் ரசிகர்கள் அதிகமாகவே கூக்குரல் எழுப்பியுள்ளார்கள்.
 
அதனால்தான் தற்போது அந்தக் காட்சியை நீக்கி விட்டார்கள். ஆனாலும், அதைத் தொடர்ந்து சாலையில் ஹிந்திப் பாடல்களுக்கு சூர்யா, சமந்தா, வித்யுத் நடனமாடும் காட்சியையும் சேர்த்துத் தூக்கியிருக்கலாமே என ரசிகர்கள் தியேட்டரில் கமெண்ட் அடிக்கிறார்கள். இன்னும் சிலரோ அதையும் சேர்த்துத் தூக்கிறதுக்குள்ள படத்தையே தூக்கிடுவாங்களே என தியேட்டர்களில் கமெண்ட் அடித்தது நமக்கு அதிர்ச்சி அளித்தது.

Comments