ஒரு படம் இயக்கி விட்டு வாருங்கள். அந்த படத்தை பார்த்து விட்டு எனக்கு திருப்தி என்றால் அதன்பிறகு உங்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் தருகிறேன்: விக்ரம்!!!

13th of August 2014
சென்னை:வித்தியாசமான கதைகள் கதாபாத்திரங்கள் மூலம் மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு வருபவர் விக்ரம். படத்துக்குப்படம் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்பதில் தனி அக்கறை கொண்ட விக்ரம், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து விட்டு, கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில், அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க சில புதுமுக இயக்குனர்களும் விக்ரமை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால், அப்படி செல்பவர்களிடம் கதை கேட்க முன்வராத விக்ரம், இப்போதெல்லாம் படங்கள் ஓடுவதே ரொம்ப ரிஸ்க்காக உள்ளது. யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதே தெரியவில்லை. நன்றாக கதை சொல்கிறார்கள். ஆனால் படமாக்குவதில் சொதப்பி விடுகிறார்கள.
அதனால் நீங்கள் ஒரு படம் இயக்கி விட்டு வாருங்கள். அந்த படத்தை பார்த்து விட்டு எனக்கு திருப்தி என்றால் அதன்பிறகு உங்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் தருகிறேன் என்கிறாராம். விக்ரமின் இந்த முடிவுக்கு காரணம் அவரது நடிப்பில் உருவான கரிகாலன் உள்ளிட்ட இரண்டொரு புதியவர்களின் படங்கள் சர்ச்சைக்குள்ளாகி பின்னர் கிடப்பில் போடப்பட்டது. அதனால்தான் இப்போது புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற உறுதியுடன் இருக்கிறாராம் விக்ரம்.

Comments