21st of August 2014
சென்னை:கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம்
‘குயின்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று
தென்னிந்திய மொழிகளில் நடிகர் தியாகராஜன் ரீமேக் செய்யப் போகிறார்.
தற்போது இபப்டத்திற்கான நாயகி தேர்வில் ஈடுபட்டுள்ள அவர், நாயகி தேர்வானவுடன், பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றின் மூலம், அவரை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் ‘குயின்’ ரீமேக் இவர் நடிக்கப் போகிறார், அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்று பல தகவல்கள் கசிந்தது. ஆனால், இதை மறுத்துள்ள தியாகராஜன், இதுவரை நாங்கள் யாரையும் குயின் ரீமேக்கின் நாயகியாக ஒப்பந்தம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், குயின் ரீமேக் நடிக்க தான் மிகவும் ஆசைப்படுவதாக நடிகை பிரியா ஆனந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்ப், இந்தி, தெலுங்கு என்று அவ்வபோது சில படங்களில் நடித்து வந்த பிரியா ஆனந்த் ‘எதிர் நீச்சல்’ படத்திற்குப் பிறகு ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும், இவர் ‘குயின்’ ரீமேக் படத்தில் கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், ரொம்பவும் சந்தோஷப்படுவேன், என்று கூறியிருக்கிறார்.
பிரியா ஆனந்தின் இந்தை ஆசையை தியாகராஜன் நிறைவேற்றுவாரா!

Comments
Post a Comment