25th of August 2014
சென்னை:இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியைத் திருமணம் செய்யப் போவது
இல்லை என்று நடிகை அனுஷ்கா சர்மாவின் செய்தித் தொடர்பாளர்
தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் கூற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. அங்கு இந்திய வீரர்கள் தங்கும் ஓட்டலிலேயே அனுஷ்கா சர்மாவையும் தங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இணைய தளங்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாயின. இந்நிலையில் அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்தத் தகவலை மறுத்துள்ளார்.
இணையதளங்களில் வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி தான் என்றும், அதில் உண்மையில்லை என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment