'ஐ' இசைவெளியீட்டு விழாவுக்கு அர்னால்டு வருகிறாரா?!!!

15th of August 2014
சென்னை:தொடங்கப்பட்ட நாள் முதலே டாப் கியரில் தான் ஆரம்பித்தது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திற்கான எதிர்பார்ப்பு.
 
ஷங்கரின் ஐடியா, விக்ரமின் உழைப்பு, பி.சி.ஸ்ரீராமின் கேமிரா, ஏ.ஆர்.ரகுமானின் இசை என சரியான கூட்டணியில் 150 கோடி ரூபாய் என்கிற பிரமிக்க வைக்கிற பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்தப்படம்..
 
இந்தப்படத்தை தயாரித்து வரும் ஆஸ்கர் நிறுவனம் சென்னை, ஹைதராபாத், மும்பை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக சென்னையில் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.
 
இதற்கு முன்பு கமலின் 'தசாவதாரம்'; படத்திற்கு ஜாக்கிசான் வந்தது பிரம்மாண்டம் காட்டியது போல, 'ஐ' இசை வெளியீடு விழாவிற்கு பில் கிளிண்டன் மற்றும் அர்னால்டு ஸ்வாஸ்நெகர் ஆகியோரை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம். ஆஸ்கர் நிறுவனம்.

Comments