12th of August 2014
சென்னை:சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் ஓரளவு பரிச்சயமானவர் தான் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.. தமிழில் உலா வந்த சிங்கத்தை இந்தியிலும் ரீமேக் செய்து உலாவ விட்டவர். இப்போது இவர் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ ஆகஸ்ட்-15ல் வெளிவர தயாராக இருக்கிறது.
ரோஹித் ஷெட்டியின் ஆஸ்தான ஹீரோக்கள் என்றால் இருவர் தான்.. ஒன்று அமிதாப்.. மற்றவர் நம்ம சூப்பர்ஸ்டார்.. ரஜினியின் மீது இவர் கொண்ட அலாதி பிரியம் காரணமாகத்தான், தான் இயக்கிய ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் கூட ரஜினியை பின்புலமாக வைத்து ஷாருக்கானை லுங்கி டான்ஸ் ஆடவைத்தார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘லிங்கா’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சென்று சந்தித்திருக்கிறார் ரோஹித் ஷெட்டி.. அவர் வந்திருப்பதை அறிந்து நேரடியாகவே அவரை வரவேற்க வந்துவிட்டாராம் ரஜினி.
அது தான் ரஜினி” என்று சிலாகிக்கும் ரோஹித் ஷெட்டி ரஜினியுடன் தான் பேசிய அரைமணி நேரம் தனது வாழ்வில் பொன்னான தருணம் என்கிறார் பூரிப்புடன்.. ரஜினியுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். ஆனால் தயவுசெய்து படம் வெளியாகும் வரை அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிரவேண்டாம் என இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கேட்டுக்கொண்டாராம்.

Comments
Post a Comment