9th of August 2014
சென்னை:ஜெயம்’ ரவியின் ‘பூலோகம்’ விரைவில் ரிலீசாகவிருக்கிற நிலையில், ‘ரோமியோ ஜூலியட்’, ஜெயம் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்’, சுராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சுராஜ் இயக்கும் படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி என இரண்டு ஹீரோயின்கள நடிக்கிறார்கள். இந்தப் படம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி டபுள் ரோலில் நடிக்கிறார் என்றும் அதில் ஒரு கேரக்டரில் நல்லவனாகவும், இன்னொரு கேரக்டரில் வில்லனாகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
அத்துடன் ‘ஜெயம்’ ரவியுடன், ‘கலகலப்பு’, ‘நேரம்’ படங்களில் நடித்த ஜான் விஜய், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ‘ஜெயம்’ ரவி ஏற்கெனவே அமீர் இயக்கத்தில் ‘ஆதிபகவான்’ மற்றும் சமுத்திரக்கனியின் ‘நிமிர்ந்து நில்’ படங்களில் டபுள் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment