ஏ.ஆர்.முருகதாஸ் – கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் ‘ரங்கூன்’!!!

27th of August 2014
சென்னை:தனது உதவி இயக்குனர்கள் பலரும் இயக்குனர்களாக சினிமா உலகில் அடியெடுத்து வைக்க தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து அவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு மகத்தான பணியை தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
 
இந்தமுறை அந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் முருகதாஸின் ஆஸ்தான துணை இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி. இவர் ‘ஏழாம் அறிவு’ மற்றும் ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இவர் இயக்கும் படத்திற்கு ‘ரங்கூன்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.
 
ஒரு 25 வயது இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள். 2௦015 மார்ச்சில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமாம்.

Comments