18th of August 2014
சென்னை:மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “வலியுடன்
ஒரு காதல்” இந்த படத்தில் புதுமுகம் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார். இவர் நடிகை ராதாவின் சகோதரி மகள்.
கார்த்திகா, துளசி ஆகியோரின் சகோதரி இவர். மற்றும் உமாரவி, வின்சென்ட்
சுரேஷ், பஞ்சர்பாஸ்கர், சபா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜே.கே.செல்வா இசையமைக்கிறார் உமா சுப்பிரமணியம் பாடல்கள் எழுகிறார்.
சஞ்சீவன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படம் பற்றி கூறீய சஞ்சீவன், "கிராமத்தில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ராஜேஷ். பக்கத்து ஊரில் உள்ள பணக்கார நாயகியை காதலிக்கிறான்.இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. முடிவில் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பதைத் தான் திரைக்கதையாக்கி இருக்கிறோம்.
கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திகைப்பூட்டும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வருகிறது." என்றார்.

Comments
Post a Comment