சென்னை:பழைய நடிகைகளின் படங்களை பார்த்து நடிப்பு கற்றேன் என்றார் வேதிகா.இது பற்றி அவர் கூறியது:காவியத்தலைவன் படத்தில் நடித்து வருகிறேன். நாடக பின்னணியிலான கதை. வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். நாடக கலைஞர்கள் கதை என்பதால் இதில் நடித்துள்ள சித்தார்த், பிருத்விராஜ், நான் உள்பட பல தோற்றங்களில் நடித்திருக்கிறோம். நானே சுமார் 25 தோற்றங்களில் வருகிறேன்.
இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ‘சரஸ்வதி சபதம், ‘திருவிளையாடல் படங்களை பார்த்து அதில் ஹீரோயின்கள் அணிந்த காஸ்டியூம், வசன உச்சரிப்பு போன்றவற்றை தெரிந்துகொண்டேன். ‘பரதேசி படத்தில் நடித்தபோதும் இதுபோல் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு பார்த்து நடித்தேன்.
அடிப்படையில் நான் நடனம் பயின்றிருப்பதால் அதுபோல் கதாபாத்திரங்கள் அமையும்போது மிகவும் ரசிப்பேன். காவியத்தலைவன் படத்தில் நிறைய பரதநாட்டியம் தொடர்பான நடனங்கள் இருந்தது. ரகுராம் மாஸ்டர் நடனம் அமைத்தார். இதுபோன்ற வேடங்கள் ஹீரோயின்களுக்கு கிடைப்பது அரிது. மேற்கத்திய நடனமும் எனக்கு பிடிக்கும். மலையாள படங்களிலும் நல்ல வேடம் எனக்கு அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறேன். இவ்வாறு வேதிகா கூறினார்.
Comments
Post a Comment