காதல் இளவரசன் என்ற இமேஜிலிருந்து ஆக்ஷன் ஹீரோ இமேஜிக்கு மாறிக்கொண்டிருக்கிறார் ஆர்யா!!!

15th of August 2014
சென்னை:காதல் இளவரசன் என்ற இமேஜிலிருந்து ஆக்ஷன் ஹீரோ இமேஜிக்கு மாறிக்கொண்டிருக்கிறார் ஆர்யா. அதன் முதல்படியாக மகிழ்திருமேனியின் மீகாமன் படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்திருக்கிறார். அதோடு, இனி ஆக்சன் ஹீரோ என்ற இமேஜை கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன் என்கிறார் அவர்.
 
நேற்று இரவு நடைபெற்ற மீகாமன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆர்யா, நிருபர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு-

* மீகாமன் ஆர்யா கேரக்டர் எப்படி?
 

இது நான் நடிக்கும் முதல் ஆக்ஷன் த்ரில்லர் படம். இதுவரை நான் இந்த மாதிரி படம் பண்ணியதில்லை. ஸ்டைலிசாக மேன்லியாக நடித்துள்ளேன். அதோடு இந்த கிளாஸ் படத்தில் ஹீரோவுக்கென்று எந்த பில்டப்பும் கிடையாது. அந்த வகையில் ஆக்சன் படங்களில் இதுஒரு புதுமாதிரியான படம்.


* மீகாமன் என்றால் என்ன?


மீகாமன் என்றால் கேப்டன் ஆப் தி ஷிப். கப்பலை வழி நடத்தி செல்பவர். கப்பலை ஓட்டும் மாலுமிக்கும் ஹெட்டாக இருப்பவரைதான் மீகாமன் என்பார்கள். அவர்கள் நிறைய விசயங்களை தெரிந்திருப்பார்கள். கப்பலை மட்டுமின்றி, கடல் அலையின் வேகம், காற்றின் வேகம் கடலில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் தெளிவாக அறிந்தவர்கள். குறிப்பாக, ரொம்ப சமார்த்தியசாலிகளாக இருப்பார்கள்.


* ஆக்சன் படத்தில் ரிஸ்க்கான காட்சிகள் நிறைய இருக்குமே?


இந்த படத்தைப்பொறுத்தவரை என்னை ரிஸ்க்கான காட்சிகளில நடிக்க வைக்கவில்லை. மாறாக, அப்படி பாருங்கள். இப்படி பாருங்கள் என்று சொல்லிச்சொல்லிதான் படமாக்கினார் டைரக்டர். அதோடு சில காட்சிகளில் நடித்து கெடுத்து விடாதீர்கள் என்று என்னை நடிக்கவே விடவில்லை. சீனின் மூடுக்கேற்ப லுக்தான் கொடுத்தேன். இப்படியே படத்தில் சின்னச்சின்ன மூவ்மெண்டுகள்தான் கொடுத்திருக்கிறேன். அதனால் அதிரடி ஆக்சன் படம் என்றபோதும் எனக்கு ரிஸ்க் இல்லை.


* இப்படத்தில் ஹன்சிகாவுக்கு நீங்கள்தான் ரெகமண்ட் செய்தீர்களாமே?


அதெல்லாம் சுத்தப்பொய். படத்தின் கதையை மகிழ்திருமேனி தயாரிப்பாளரிடம் சொன்னபோது, அவர்தான் ஹீரோயினுக்கு ஹன்சிகாவை கேட்டுப்பாருங்கள் என்று சொன்னார். அதையடுத்து அவரிடம் கதை சொன்னபோது அவருக்கு பிடித்து விடவே இந்த படத்தில் நடிக்க ஓ.கே சொன்னார். மேலும் மகிழ்திருமேனிக்குகூட இநத படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்கும் எணணம் முதலில் கிடையாது. தயாரிப்பாளர் சொன்ன பிறகுதான் ஹன்சிகா இந்த படத்திற்குள் வந்தார்.

 
மற்றபடி என்னைப்பொறுத்தவரை ஹன்சிகா இல்லாமல் இன்னொரு புது நடிகை இந்த படத்தில் நடித்திருந்தால் தமிழ் கற்றுக்கொடுக்கும் சாக்கில் அவரிடம் கடலை போட்டிருப்பேன். ஆக, ஹன்சிகா வந்ததால் அது நடக்கவில்லை.


* இந்த படத்தில் ஹன்சிகாவுடன் ரொமான்டிக் பாடல் இல்லாதது வருத்தமளிக்கிறதா?


ஏற்கனவே சேட்டையில் அவருடன் ரொமான்ஸ் செய்திருக்கிறேன். இந்த படத்தைப் பொறுத்தவரை கதைப்படி அவசியப்படவில்லை என்பதால் பாடல் வைக்கவில்லை. மேலும், இதுவரை நடித்த படங்களில் இருந்து இந்த படத்தில் ஹன்சிகா வித்தியாசமான ஒரு ரோலில் நடித்திருக்கிறார்.


* படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகாவிடம் நீங்கள் சேட்டை பண்ணியதால் அவர் அழுது விட்டதாக கூறுகிறார்களே?


நான் அவரிடம் எந்த சேட்டையும் பண்ணவில்லை. இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்து முடித்தபோது அவர் அழுது விட்டார். காரணம், அந்த பாடலால் தனது இமேஜ் கெட்டுப்போய் விடுமோ என்று பயந்துதான் அழுதார். அதையடுத்து அப்படியெல்லாம் எதுவும் ஏற்படாது என்று டைரக்டர் உள்பட அனைவரும் அவரை தெளிவுபடுத்தியபோது அவர் புரிந்து கொண்டார். மற்றபடி ஹன்சிகா அழுததற்கு ஆர்யா காரணம் என்று டைரக்டர் சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் என்றார் ஆர்யா

Comments