25th of August 2014
சென்னை:1979ஆம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமான விஜயகாந்த், திரையுலகில் தனது ஆக்ஷன் நடிப்பாலும் அனல் பறக்கும் வசனங்களாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். திரையுலகின் மும்மூர்த்திகள் என்கிற பட்டியலில் ரஜினி, கமல் இருவருக்கு நிகரான செல்வாக்கையும் புகழையும் பெற்றவர்.
மொத்தம் 150 படங்களில் நடித்துள்ள கேப்டன் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதும், தமிழ்தவிர பிறமொழிப் படங்களில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தவறு செய்யும் அரசுக்கு எதிராக, லஞ்சத்திற்கு எதிராக தனது படங்களில் போராடும் குணம் கொண்டவராக நடித்தார் விஜயகாந்த். அதுதான் அவரை அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தூண்டுகோலாக அமைந்தது.
இன்று தமிழக அரசியலிலும் வெற்றிகரமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக வலம் வருகிறார். அதுமட்டுமல்ல, கேப்டன் எப்போதுமே தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவதுதான் வழக்கம். இன்று 62வது பிறந்தநாள் காணும் கேப்டனுக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
Comments
Post a Comment