க்ளீன் ‘யு’ வாங்கிய வாலிபராஜா!!!

25th of August 2014
சென்னை:கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இணைந்து நடித்த சேது, சந்தானம், விஷாகா சிங் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிபராஜா’. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்தின் சிஷ்யர் சாய் கோகுல் இயக்கியுள்ள இப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது. ‘க்ளீன் என்டர்டெய்னர் படம்’ என்ற பாராட்டுக்களோடு
 
இப்படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள் தணிக்கைக் குழுவினர். இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படமாம் இது! ‘வாங்ஸ் விஷன்’ எனும் நிறுவனம் சார்பில் எச்.முரளி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ரதன் இசை அமைத்திருக்கிறார். ‘வாலிபராஜா’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

Comments