22nd of August 2014
சென்னை::நிர்வாண காட்சியில் நடித்த நடிகர் அமீர் கான், தயாரிப்பாளர், டைரக்டர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அமீர்கான் பிகே, என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இதையொட்டி அமீர்கான் நிர்வாணமாக ரயில் தண்டவாளத்தில் நின்று பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல் போஸ்டர்கள் மும்பையில் ஒட்டப்பட்டுள்ளது.
இணைய தளங்களிலும் இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே பிகே பட நிர்வாண போஸ்டர் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் அமீர்கான், படத்தின் இயக்குனர் ராஜ் குமார் ஹீராணி, தயாரிப்பாளர் விதுவினோத் சோப்ரா உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோர்ட்டு, அமீர்கான் உள்பட 10 பேர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment