18th of August 2014
சென்னை:தங்களுக்கு தமிழ்சினிமாவில் ஒரு முகவரி தந்த இயக்குனர்கள் மீண்டும் தங்களது படங்களில் நடிக்க அழைக்கும்போது என்ன ஏது என்று காரணம்கூட கேட்காமல் ஓடிவந்து நடித்து கொடுக்கிறார்கள் சில நடிகர்கள். இதைத்தான் ‘குருபக்தி’ என்பார்கள்.
சரி.. விஷயத்திற்கு வருவோம். இப்போது சுசீந்திரனும் இவர்களது வழியை பின்பற்றி தற்போது விஷ்ணுவை வைத்து ‘ஜீவா’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவரது டைரக்ஷனில் ‘வெண்ணிலா கபடி குழு’வில் விஷ்ணு நடித்திருந்ததது தெரியும் தானே.
டைட்டில் ரோலான ‘ஜீவா’ கேரக்டரில் விஷ்ணு நடிக்கிறார். கதாநாயகியாக ‘வருத்தப்படாத’ நாயகி ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கூடவே நகைச்சுவை நடிகர் சூரியும் இருக்கிறார். இந்தப்படத்தின் பின்புலமாக கிரிக்கெட் விளையாட்டை கையில் எடுத்துள்ளார் சுசீந்திரன். இந்தப்படத்தை சுசீந்திரனும் ஆர்யாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை செப்டம்பர் இறுதியில் வெளியிட தீர்மானித்துள்ளனர்.
Comments
Post a Comment