நினைத்ததை முடிக்கிறார் சித்தார்த்!!!

8th of August 2014
சென்னை:என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று சித்தார்த் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியின்போது வருத்தத்துடன் சொன்னார்.. 
 
அதே உத்வேகத்துடன் களம் இறங்கினார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த  சித்தார்த்துக்கு சுந்தர்சி.யின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் நல்ல ரெஸ்பான்சை கொடுக்க, தற்போது வெளியான ‘ஜிகர்தண்டா’ அவரது தமிழ்க்கனவை நனவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.
 
ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிகின்றன சித்தார்த்துக்கு.. அவரது குருநாதர்களான மணிரத்னமும் ஷங்கரும் பாராட்டித்தள்ளிவிட்டனர். அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் பிருத்விராஜூடன் இணைந்து நடித்துள்ள ‘காவியத்தலைவன்’ படம் வெளியானால் இன்னும் தனது கேரியர் சற்று உயர்ந்த நிலைக்கு செல்லும் என நம்புகிறார் சித்தார்த்..அதனால் முன்னைவிட இன்னும் முனைப்புடன் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சித்தார்த்.. 
 
கடந்த செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய‘லூசியா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் சித்தர்த். இந்தப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனரான பிரசாத் ராமர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இனி தனது படங்கள் ஒரு குறிப்பிட்ட சீரான இடைவெளியில் வெளியாகும் என்கிறார் சித்தார்த் உறுதியாக. எப்படியோ தமிழில் நிலையான ஒரு இடத்தை தக்கவைக்க நினைத்த சித்தார்த், அதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டார் என்பதே உண்மை..

Comments