கலர்புல் நட்சத்திரங்களால் களைகட்டியது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசை வெளியீட்டு விழா!!!

28th of August 2014
சென்னை:குறித்த நேரந்ததில் தரமான படங்களை எடுக்க வேண்டுமா கூப்பிடுங்கள் இயக்குனர் ஆர்.கண்ணனை என்று சொல்லும் அளவுக்கு, தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கியுள்ளார் ஆர்.கண்ணன். அவரது ஐந்தாம் படமாக உருவாகியிருக்கிறது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.
 
விமல், சூரி, பிரியா ஆனந்த், விஷாகா, இனியா என கலர்புல் நடசத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
 
படத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களுடன் இன்றைய இளம் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டதால் விழா களைகட்டியது. மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர்கள் சுசீந்திரன், ரவி மரியா, ‘சுந்தரபாண்டியன்’ பிரபாகரன், மனோபாலா, சிங்கமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். ‘நாடோடிகள்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் ஏழாவது படம் இது.

Comments