காதல் பிரிவால் சிம்புவை நோகடிக்க விருப்பமில்லை: ஹன்சிகா!!!

20th of August 2014
சென்னை:காதல் பிரிவால் சோர்ந்து போகாமல், தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா. அவர் மறந்தாலும் மீடியா சிம்பு & ஹன்சிகா காதலை விடுவதாக இல்லை. சிம்புவுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து சமீபத்தில் பத்திரிகை ஒன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது,

இதைப்பத்தி சொல்றதுக்கு எதுவுமில்லை. அட்லீஸ்ட் யாராவது ஒருத்தராவது அமைதியா இருக்கணும். அமைதியா இருக்கிறதுதான் என்னோட குணம். ஏன்னா நான் அந்தமாதிரியான குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கேன். பிரிவு ஏற்படுறதுக்கு முன்னாடி என்கிட்ட அவர் (சிம்பு) ரெண்டு வார்த்தைதான் சொன்னாரு. அதுனால காயப்பட்டு நானும் ரெண்டு வார்த்தை பேசினேன். ஆனா அவரை காயப்படுத்துறதுக்கு எனக்கு விருப்பமில்ல. இப்பவும் அவர் நல்லாயிருக்கணும்னு வாழ்த்துறேன்.’’ எனக் கூறியிருக்கிறார்.

காதல் பிரிவிற்கு பின்னரும் ‘வாலு’ படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டது. இதன்பிறகு அவர் ‘வேட்டை மன்னன்’ படத்திற்காக சிம்புவுடன் மீண்டும் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Comments