சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல்!!!

24th of August 2014
சென்னை:பாரதிராஜாவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டவர் இளையராஜா. இந்நிலையில் 16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார். முதல் மரியாதை படம் தனக்கு பிடிக்கவே இல்லை என்ற போதும், பாரதிராஜா தனது நண்பர் என்ற ஒரே காரணத்திற்காக அப்படத்திற்கு இசையமைத்ததாக ஒரு படவிழாவில்கூட சமீபத்தில் தெரிவித்தார் இளையராஜா.
 
ஆனால், சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது. அதனால் அன்னக்கொடியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜாவிடம் இசையமைக்க பாரதிராஜா கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம். அதனால் அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளாராம் பாரதிராஜா.
 
தமிழகத்தில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய கதையில் அடுத்து ஒரு படம இயக்குகிறாராம் பாரதிராஜா. வயதான ஒருவருக்கும், சிறு குழந்தைகளுக்குமிடையே நடக்கும் சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகும் அந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் லண்டனில் நடைபெற உள்ளதாம். இப்படத்தை இயக்குவதோடு, முக்கியமான வேடத்திலும நடிக்கிறார் பாரதிராஜா. இப்படத்திற்கு வைரமுத்து பாட்டெழுதுகிறார்.

Comments