9th of August 2014
சென்னை:சிகரம் தொடு’ படத்தில் சத்யராஜ் விக்ரம் பிரபுவின் தந்தையாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் இயக்குனர் கௌரவ் இந்தக்கதையை உருவாக்கியபோதே அந்த கேரக்டரில் சத்யராஜ் தான் அவர் மனதில் வந்து நின்றிருக்கிறார். அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்னரே சத்யராஜிடம் இந்த கதையை சொல்லிவிட்டாராம் கௌரவ்.

சிகரம் தொடு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய கௌரவ் “இந்தப்படத்தில் கிட்டத்தட்ட 15 நாட்கள் சத்யராஜ் சார் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இரவு நேர படப்பிடிப்புதான் அவருக்கு.. நாங்கள் எல்லாம் சட்டை கசங்காமல் வேலைபார்க்க, அவரோ மண்ணிலும் சேற்றிலும் புரண்டு அழுக்குத்துணியுடனே காட்சியளிப்பார்.
ஆனால் அதற்காக அவர் கொஞ்சம் கூட முகம் சுழித்ததே இல்லை.. சத்யராஜ் சாரை நான் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மாதிரி தான் பார்க்கிறேன்..” என ஒரு பெரிய ஐஸ்கட்டியாக தூக்கி வைத்தார்.
Comments
Post a Comment