சர்ச்சைக்குரிய ‘வி.ஐ.பி’ வசனம் நீக்கப்படுகிறது!!!

11th of August 2014
சென்னை:தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணா பள்ளிகளை குறைத்து மதிப்பிட்டு ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.  இயக்குனர் வேல்ராஜும் அது தெரியாமல் நடந்த தவறு என விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம் செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் தனுசுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் தங்களது வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த வசனத்தை எல்லா பிரதிகளிலும் நீக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே தனுஷ் புகைபிடிப்பது போன்ற போஸ்டர் சர்ச்சைகள் இன்னொரு பக்கம் கிளம்பியதால் பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பாத தனுஷும் இயக்குனர் வேல்ராஜும் ராமகிருஷ்ணா பள்ளி பற்றி கூறப்பட்டுள்ள வசனத்தை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர்.

Comments