மகள் வேண்டும் என சண்டை போடமாட்டேன்” – மஞ்சு வாரியர்!!!

1st of August 2014
சென்னை:சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 
பிரபல மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் கூட இப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்தான். ஆனால் இன்று விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி நிற்கிறார்கள். இந்த விவாகரத்துகளில் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம் என்றாலும், பெரும்பாலும் குழந்தைகள் தந்தையுடனேயே இருக்க விரும்புவது ஆச்சர்யமான ஒன்று. நடைமுறையில் கமல், சரத், பார்த்திபன், மனோஜ் கே, ஜெயன், பிரபுதேவா ஆகியோர் இதற்கு முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.
 
அந்த வகையில் “என் மகள், அவள் யாரிடம் இருக்க விரும்புகிறாளோ இருக்கட்டும். அவள் திலீப்புடன் இருக்கிறேன் என்று சொன்னாலும் நான் அதற்காக சண்டைபோட மாட்டேன். என்னிடம் இருப்பதை விட பத்திரமாகவே அங்கே இருப்பாள். அவள் விரும்பும்போது என் வீட்டிற்கு வந்து பார்த்துக்கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.

Comments