கமல் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!!!

26th of August 2014
சென்னை:விஸ்வரூபம்’ படத்தின் மூலம் பல பிரச்சனைகளை சந்தித்த கமல்ஹாசன், தற்போது நடித்து வரும் ‘பாபநாசம்’ படத்தினாலையும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கமல், கவுதமி ஜோடியாக நடிக்கின்றனர்.


இந்த நிலையில் திரிஷ்யம் கதை தன்னுடையது என்றும் எனவே படத்தை தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்கும்படியும் எழுத்தாளர் சதீஷ்பால் கொச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி இதனை விசாரித்து தமிழில் ரீமேக் செய்வதற்கு இடைக்கால தடை விதித்தார்.

அதன் பிறகு சதீஷ்பாலின் ஒரு மழை காலத்து நாவலை நீதிபதி வாசன் படித்து விட்டு திரிஷ்யம் படத்தை பார்த்தார். இதையடுத்து வழக்கில் தற்போது அவர் அளித்த தீர்ப்பில், ஒரு மழை காலத்து நாவலுக்கும் திரிஷ்யம் படத்துக்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. அந்த நாவலை தழுவித்தான் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இது காப்புரிமை சட்டத்தை மீறும் செயலாகும்.

திரிஷ்யம் படத்தை தமிழில் எடுக்க வேண்டுமானால் முன் கூட்டியே பிணை தொகையாக ரூ.10 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் கமல் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Comments