27th of August 2014
சென்னை:வரும் செப்டம்பர்-15ஆம் தேதி தான் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்தப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.
இந்த விழாவிற்காக ஜாக்கிசானையும் அர்னால்டையும் சென்னை அழைத்துவர திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். சினிமாவிற்காக எது தேவைப்படுகிறதோ அதை எங்கிருந்தாலும் எப்படியாவது வரவழைத்து விடும் திறமையாளர் தான் ஷங்கர். ஆனால் அவரால் கூட முடியாதது ஒன்று இருக்கிறதே.. அதை சாதித்து காட்டுவாரா ஷங்கர்..?
ஐந்தாறு வருடங்களுக்கு முன் தான் தான் தயாரித்த ‘தசாவதாரம்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு கலைஞரையும் ஜாக்கிசானையும் ஒன்றாக மேடைக்கேற்றிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் அந்த விழாவில் கூட தலைகாட்ட விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டார். அந்த விழா தான் என்றில்லை. தன படங்கள் உள்ளிட்ட எந்த சினிமா விழாவிலும் கலந்துகொள்ளாதவர் தான் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
அது அவரது இயல்பு என்றாலும், ஷங்கர் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனை இந்த உலக ஜாம்பவான்களுடன் சேர்த்து மேடையில் பங்குபெற செய்வாரா ஷங்கர்.? அப்படி அவரை அழைத்து வந்து மேடையேற்றினால் அது உண்மையிலேயே மிகப்பெரிய அதிசய நிகழ்வாகத்தான் இருக்கும்..
Comments
Post a Comment