சஸ்பென்சை உடைத்து விடாதீர்கள்” – பத்திரிகையாளர்களுக்கு லிங்குசாமி வேண்டுகோள்!!!

20th of August 2014
சென்னை:லிங்குசாமி இயக்கியுள்ள ‘அஞ்சான்’ படம் வெளியாவதற்கு முன்னரே அந்தப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய விஷயம், சூர்யா இதில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பதுதான். அதை லிங்குசாமியோ, சூர்யாவோ மறுக்கவும் இல்லை.

தற்போது படம் வெளியான நிலையில் ராஜுபாய், கிருஷ்ணா என இரு வேடங்களில் நடித்திருக்கும் சூர்யாவின் டபுள் ஆக்சன் ட்விஸ்ட் தான் படத்திற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக இருக்கிறது. அதை முன்கூட்டியே அறியாமல் படம் பார்ப்பதுதான் ஒரு ரசிகனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
 
அதனால் தான் விமர்சனம் எழுதும்போது அவர்கள் இருவரை பற்றிய சஸ்பென்சை மட்டும் தயவு செய்து உடைத்து விடாதீர்கள் என பத்திரிகையாளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் லிங்குசாமி.

Comments